வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத் தொகை

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத் தொகை

1 mins read

கேப் டவுன்: பாகிஸ்தான் சென்று விளையாடவுள்ள வெஸ்ட் இண் டீஸ் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஊக்கத்தொகை வழங்கவுள்ளது. கடந்த 2009ல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப் பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சென்று விளையாட அனைத்துலக கிரிக் கெட் வீரர்கள் பலரும் அஞ்சுகின்ற னர். இந்நிலையில் தங்கள் நாட்டிற்கு வருவதை மற்ற வீரர்கள் பாதுகாப் பாக உணர வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் பலனாக 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது ஸிம் பாப்வே. ஆனால் ஸிம்பாப்வே வீரர் களுக்கு 12,500 அமெரிக்க டாலர் கள் ஊக்கத்தொகையாக பாகிஸ் தான் வழங்கியது. அதன் பிறகு நடந்த பாகிஸ் தான் சூப்பர் லீக்கின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சென்று விளையாடி வெளிநாட்டு வீரர்க ளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. அதே போல், அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்லவுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. ஆனால் இவர்களுக்கான ஊக் கத்தொகை 25,000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.