கேப்டவுன்: தென்னாப்பிரிக்கா= ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா சென்று இருக்கிறது. டர்பனில் நடந்த முதல் போட்டி யில் ஆஸ்திரேலியாவும் போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.
இரண்டாவது போட்டியில் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்த தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச் சாளர் ககிசோ ரபாடா, அவருக்கு முன்பாகச் சென்று பலமுறை கத்தி யதுடன் அவரது தோளிலும் இடி துச் சென்றதாகக் கூறப்பட்டது. இதனால் ரபாடா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி), அவர் இரு ஆட்டங்களில் விளையாடத் தடை விதித்தது. ஆயினும், அந்தத் தடையை எதிர்த்து ரபாடா மேல் முறையீடு செய்தார். விசாரணை முடிவில் ரபாடா மீதான தடை ரத்து செய்யப்பட்டதால் இன்றைய போட்டியில் அவரால் விளையாட முடியும்.

