சிங்கப்பூரின் ஒரே தொழில்முறை விளையாட்டுத் தொடரான, 1996ல் தொடங்கப்பட்ட எஸ்-=லீக் காற் பந்து, 23 பருவங்களுக்குப் பிறகு 'சிங்கப்பூர் பிரிமியர் லீக்' எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தின் (எஃப்ஏஎஸ்) தலைவர் லிம் கியா டோங் தேசிய விளையாட் டரங்கில் இதனை அறிவித்தார். அத்துடன், சிவப்பு, நீல வண் ணங்களில் சிங்கம் கர்ஜிப்பது போன்று லீக்கின் புதிய சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிவப்பு சிங்கப்பூரின் தேசிய நிறத்தையும் நீலம் எஃப்ஏஎஸ்ஸின் நிறத்தையும் குறிக்கின்றன.
நிகழ்ச்சியில் பேசிய திரு லிம், "சிங்கப்பூர் காற்பந்தை முன்னெ டுத்துச் செல்ல, நமது உள்ளூர் காற்பந்துத் தொடருக்குப் புத்துயிர் அளிக்கவேண்டியது அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்துள் ளோம். எல்லா சிங்கப்பூரர்களும் பெருமையுடன் ஆதரவளித்து, சொந்தம் கொண்டாடும் வகையில் ஒவ்வோர் அம்சத்திலும் நிபுணத் துவம் இருக்கும்படியான ஒரு லீக்கை உருவாக்க விரும்பு கிறோம்," என்று சொன்னார். சிங்கப்பூர் பிரிமியர் லீக், நான்கு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்து அறிமுக நிகழ்ச்சியில் (இடமிருந்து) சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் துணைத் தலைவர் பெர்னார்ட் டான், தலைவர் லிம் கியா டோங், துணைத் தலைவர் எட்வின் டோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

