லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் மான்செஸ்டர் சிட்டி குழுவைவிட பின்தங்கி இரண்டாம் இடத்தில் இருந்தாலும் சமூக ஊடகங்களில் அசுர பலத்துடன் திகழ்கிறது மான்செஸ்டர் யுனைடெட் குழு. உலகின் பணக்காரக் காற்பந்துக் குழுவான மேன்யூ, இபிஎல் குழுக்களுக்கான சமூக ஊடகத் தரவரிசை 2017ல் முதலிடம் பிடித்தது. எட்டுச் செயல்திறன் காரணிகள் அடிப்படையில் 20 இபிஎல் குழுக்களைத் தரவரிசைப் படுத்தியது 'நியூட்டன் இன்ஸைட்' எனும் அமைப்பு. சிட்டி, செல்சி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய குழுக்கள் அடுத்த நிலைகளில் வந்தன. ஆறாமிடம் பிடித்து ஆச்சரியம் அளித்தது ஹடர்ஸ்ஃபீல்ட் டௌன். ஸ்பர்ஸ் குழு ஏழாம் இடத்தையும் ஸ்டோக் சிட்டி கடைசி இடத்தையும் பிடித்தன. மேன்யூவை ஃபேஸ்புக்கில் 73.7 மில்லியன் பேரும் டுவிட்டரில் 16.5 மி. பேரும் பின்தொடர்கின்றனர்.
சமூக ஊடகங்களில் மேன்யூ ஆதிக்கம்
1 mins read

