கலிஃபோர்னியாவின் சாக்ரமென்டோ நகரில் கையில் ஆயுதம் எதுவும் வைத்திராத கறுப்பினத்தவர் ஒருவரை போலிசார் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து நேற்று அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஸ்டீபன் கிளார்க் என்ற 22 வயது இளைஞரின் கையில் இருப்பது துப்பாக்கி என்று நினைத்து அவரை போலிசார் சுட்டுக்கொல்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து போலிசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
கார் திருட்டு மற்றும் வீடுபுகுந்து ஒருவன் திருடுவதாக போலிசாருக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து போலிசார் அந்த இடத்திற்குச் சென்றிருந்தனர். ஸ்டீபன் கிளார்க் என்ற இளைஞர் அவரது தாத்தா, பாட்டி வீட்டின் முற்றத்தில் இருந்தபோது அவர் கையில் இருப்பது கைத்தொலைபேசி என்று தெரியாமல் அவரை போலிசார் சுட்டுக்கொன்றதாக அந்த இளைஞரின் பாட்டி கூறியுள்ளார். அந்த இளைஞரின் கையில் இருப்பது துப்பாக்கி என்று தாங்கள் நினைத்ததாக போலிசார் கூறியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

