மெல்பர்ன்: எஃப்1 கார் பந்தயத் தின் இரண்டு பயிற்சி பந்தயங் களிலும் மெர்சிடிஸ் வீரர் லூவிஸ் ஹேமில்டன் முன்னிலை பெற்றார். இந்த முடிவுகளால் இப்பருவத் திலும் வெற்றியாளர் பட்டம் வெல் வதற்கான வாய்ப்பு ஹேமில்டனுக்கு அதிகம் உள்ளதாகப் பார்க்கப்படு கிறது. முதல் பயிற்சி சுற்றின்போது பந்தய தூரத்தை 0.551 விநாடிகள் முன்னதாகவும் இரண்டாவது பயிற்சி சுற்றில் 0.127 விநாடிகள் முன்னதாகவும் கடந்து முன்னிலை பெற்றார் கடந்த பருவ வெற்றியாள ரானார் ஹேமில்டன்.
முதல் பயிற்சி சுற்றில் பந்தய தூரத்தை 1.24:577 விநாடிகளில் கடந்த போட்டாஸ் இரண்டாவது இடத்தையும் ரெட்புல் வீரர் வெர்ஸ் டபன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள். ஆனால் இரண்டாவது பந்தயச் சுற்றில் போட்டி கடுமையாக இருந் தது. இதில் 0.283 விநாடிகள் இடைவெளியில் மெர்சிடிஸ், ரெட் புல், ஃபெராரி அணிகள் அடுத் தடுத்த இடங்களைப்°பிடித்தன. இரண்டாவது பயிற்சியில் போட்டாசை முந்தினார் ரெட்புல் வீரர் வெர்ஸ்டபன். இந்த இரண்டு பந்தயங்களிலும் ஃபெராரியின் கிமி ரைக்கோனன், செபாஸ்டியன் வெட்டல் இருவரும் முறையே நான்கு, ஐந்தாவது இடத்தைப் பிடித்தனர்.
எஃப் 1 கார் பந்தய பயிற்சியின்போது தம்படம் எடுத்துக்கொள்ளும் ஹேமில்டன். படம்: ஏஎஃப்பி

