ஹராரே: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகச் சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்த உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தினார் ரஷித் கான்.
இதன்மூலம் 44 போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். தற்போது ரஷித் கான் ஸ்டார்க் சாதனையை முறியடித்துள்ளார்.

