அறிமுக வீரரின் முதல் கோல்; வட அயர்லாந்து வெற்றி

அறிமுக வீரரின் முதல் கோல்; வட அயர்லாந்து வெற்றி

1 mins read
c4f33038-b6e4-47f9-8900-87074b9e2d20
-

பெல்ஃபாஸ்ட்: சமநிலையை நோக் கிச் சென்றுகொண்டிருந்த காற் பந்தாட்டத்தின் முடிவை மாற்றி னார் வட அயர்லாந்து குழுவின் அறிமுக ஆட்டக்காரர் பால்ஸ்மித். நேற்று முன்தினம் நடந்த உலகக் கிண்ணத்திற்கு முந்திய நட்புமுறை காற்பந்தாட்டத்தில் தென் கொரியாவோடு மோதியது வட அயர்லாந்துக் குழு. ஏழாவது நிமிடத்திலேயே கோல் போட்டு முன்னிலை பெற்றது தென் கொரியா. ஆனால் அடுத்த 13 நிமிடங்க ளிலேயே சொந்த கோலால் முன் னிலையைப் பறிகொடுக்க நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது.

அதன் பிறகு நீண்ட நேரம் கோல் எதுவும் விழாத நிலையில், ஆட்டம் சமநிலையில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்தருணத்தில் வட அயர்லாந் தின் பால் ஸ்மித் 86வது நிமிடத் தில் போட்ட கோலால் 2=1 என தென் கொரியாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ஜோர்டன் ஜோன்ஸுக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரராக பால் ஸ்மித் களம் இறக்கப்பட்டார் என்பதும் அடுத்த நான்காவது நிமிடத்திலேயே கோல் போட்டார் என்பதும் குறிப் பிடத்தக்கது.

தனது அறிமுக ஆட்டத்திலேயே கோல் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வட அயர்லாந்து காற்பந்துக் குழுவின் பால் ஸ்மித். படம்: ராய்ட்டர்ஸ்