ஸ்மித்திடமிருந்து பதவியை பறித்து பெய்னிடம் கொடுத்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

ஸ்மித்திடமிருந்து பதவியை பறித்து பெய்னிடம் கொடுத்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

1 mins read
48979cc1-dbae-459a-a56b-1615829a5f17
-

கேப் டவுன்: ஆஸ்திரேலிய கிரிக் கெட் வீரர் பான்கிராப்ட் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் தொடர் பில் ஸ்மித்திடம் இருந்து அணித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரே லியா இடையிலான 3வது டெஸ்ட் கேப் டவுனின் நியூலேண்டில் நடை பெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த 3வது நாள் ஆட்டத்தின்போது தென்னாப் பிரிக்கா பந்தடித்துக்கொண்டிருந் தது. அப்போது ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் பான்கிராப்ட் ஒரு வகை பொருளைக் கொண்டு பந்தைச் சேதப்படுத்தியது அங்கு இருந்த கேமரா மூலம் தெரிய வந்தது. பான்கிராப்ட் பந்தைச் சேதப் படுத்தியதை ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் ஒத்துக் கொண்டார். அதோடு இது தனக்குத் தெரிந்துதான் நடந்த தாகவும் கூறினார். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ஆஸ்திரேலிய அணியின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டிம் பெய்ன். படம்: ஊடகம்