பின்தங்கினார் ஹேமில்டன்; வாகை சூடினார் வெட்டல்

பின்தங்கினார் ஹேமில்டன்; வாகை சூடினார் வெட்டல்

2 mins read

மெல்பர்ன்: எஃப்1 கார் பந்தயத் தின் இப்பருவத்திற்கான முதல் சுற்றின் முடிவு பயிற்சி சுற்றின் முடிவிற்கு நேர்மாறாக அமைந் தது. மொத்தம் 21 சுற்றுகளைக் கொண்ட கார் பந்தயத்தின் முதல் சுற்ற நேற்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. 0.7 விநாடி முன்னதாக பந்த யத்தை முதல் நிலையில் இருந்து தொடங்கினார் மெர்சிடிஸ் வீரர் ஹேமில்டன். அதைத் தொடர்ந்து சில 'லேப்' வரை பந்தயம் ஹேமில்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது.

பந்தயத்தை இரண்டாம் நிலை யில் இருந்து தொடங்கிய ஃபெராரி வீரர் கிமி ரைக்கோ னனைவிட 3.3 விநாடி முன்னிலை யில் இருந்தார் ஹேமில்டன். அப்போது ஹாஸ் வீரர் ரோமைன் குரோஸ்ஜெனின் கார் பந்தயத் தடத்தில் நின்றுவிட்டதால், பாதுகாப்பு நேரம் நடைமுறைப்படுத் தப்பட்டது. இதனால் ஹேமில்டன் சில வினாடிகள் தாமதிக்க நேர்ந்ததை, சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது ஃபெராரி குழு.

இதையடுத்து தன்னை முந்திச் சென்ற ஃபெராரி வீரர் செபாஸ்டி யன் வெட்டலைப் பின் தள்ள முயன்ற ஹேமில்டனின் முயற் சிக்குப் பலன் கிடைக்கவில்லை. பயிற்சி சுற்றின் போது 5வது இடத்தில் இருந்த வெட்டல், கார் பந்தயத்தின் தற்போதைய பருவத் தின் முதல் சுற்றில் வென்றார். ஆஸ்திரேலிய மண்ணில் வெட்டலுக்குக் கிடைத்த மூன்றா வது வெற்றி இது. ஐந்தாவது முறையாக கார் பந்தய வெற்றியாளர் பட்டத்தை வெல்லும் முனைப்போடு உள்ள ஹேமில்டன் அடுத்தடுத்த சுற்று களில் வெட்டலை முந்தும் வகை யில் செயல்பட வேண்டியது அவ சியம். அடுத்த மாதம் 8ஆம் தேதி பஹ்ரேனில் இரண்டாவது சுற்று கார் பந்தயம் நடைபெறும்.