பழிதீர்க்க காத்திருக்கும் பிரேசில்

பழிதீர்க்க காத்திருக்கும் பிரேசில்

1 mins read
bb552213-8b67-4973-99a1-5f0d2abe5a04
-

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதியை யார் மறந்தாலும் பிரேசில் காற்பந்துக் குழுவினரோ, பிரேசில் காற்பந்து ரசிகர்களோ மறந்திருக்க முடியாது. வரலாறு காணாத அளவில் அன்று நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியிடம் 7=1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி கண்டது பிரேசில். அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து ஜெர்மனி இறுதி ஆட்டத்தில் அர் ஜெண்டினாவை வென்று உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி­யது. அந்த ஆட்டத்திற்குப் பிறகு இன்று பின்னிரவு இந்த இரு காற் பந்து ஜாம்பவான்களும் முதன் முறையாக அனைத்துலக நட்பு­முறை ஆட்டம் ஒன்றில் ஒன்றோடு ஒன்று மோதவிருக்கின்றன.

இந்த ஆட்டத்தில் எப்படிப்பட்ட வெற்றி கண்டாலும் அது 2014ல் பிரேசில் அணி பெற்ற தோல்விக்­கும் அவமானத்துக்கும் ஈடாகாது. ஏனெனில் எதிர்வரும் ஆட்டத்தில் அதே கோல் கணக்கில் அல்லது அதற்கு மேலான கோல் எண்ணிக்­கையில் பிரேசில் வெற்றி பெற்­றா­லும் அது உலகக் கிண்ண ஆட்டத்தில் விளையாடுவது போலோ அல்லது உலகக் கிண்­ணத்தைக் கைப்பற்றுவது போலோ ஆகாது.