ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்த அணிக்கு அஜிங்யா ரஹானே தலைமையேற்பார். அணித் தலைவர் பதவியில் இருந்து இறங்கினாலும் தொடர்ந்து அந்த அணிக்காக அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. தென்ஆப்பிரிக்கா = ஆஸ்திரே லியா இடையிலான 3=வது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது. 3வது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியா தொடக்க வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப் படுத்தினார். அவர் பந்தை சேதப்படுத்தியது தெரியும் என ஸ்மித் ஒத்துக்கொண்டார்.
இதனால் உடனடியாக அவரை அணித் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு, அந்நாட்டுக் கிரிக்கெட் வாரியத்திற்குப் பரிந் துரைத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஆஸ்தி ரேலியா கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. "ஸ்மித் மற்றும் வார்னரை பதவியில் இருந்து நீக்கியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உள்விவகாரம். இதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள ஒன்று மில்லை. நாங்கள் ஐசிசி தண்ட னையைத்தான் கருத்தில் கொள் வோம்," என்று தனது ஐசிசி தலைவர் ராஜிவ் சுக்லா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதனையடுத்து ஸ்மித், வார்னர் ஆகிய இரண்டு வீரர்களையும் ஐபிஎல் தொடரில் விளையாட முடி யாதவாறு தடை விதிக்க முடியும் என்று நெருக்கடி வலுத்து வந்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைவராக ஸ்மித் நீடிப்பாரா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் வகை யில் ஸ்மித் தலைவர் பதவியில் இருந்து இறங்குவதாக அறிவித்துள்ளார்.
அஜிங்யா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித்

