'ஹூகோ பாஸ்' தூதுவரானார் ஜோசஃப் ஸ்கூலிங்

'ஹூகோ பாஸ்' தூதுவரானார் ஜோசஃப் ஸ்கூலிங்

1 mins read
1de1a088-ed04-48f3-8a96-5ebd027fb53e
-

சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்று தந்த நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், 'ஹூகோ பாஸ்' எனும் பிரபல ஜெர்மானிய ஆடை, வாசனை திரவ நிறுவனத்தின் முதல் சிங்கப்பூர் தூதுவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப் பட்டார். நீச்சலைத் தொழில்சார்ந்த துறையாக மேற்கொள்ள ஸ்கூலிங் முடிவெடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து 'ஹூகோ பாஸ்' நிறுவனம் ஸ்கூலிங்கைத் தனது சிங்கப்பூர் தூதுவராகக் நியமனம் செய்துள்ளது.

இளமைத் துடிப்புடன் வெற்றியை நோக்கி அயராது போராடும் ஸ்கூலிங் தங்களது நிறுவனத்துக்கு உகந்த ஒன்றாகத் திகழ்கிறார் என்று 'ஹூகோ பாஸ்' நிறுவனத்தின் தென்கிழக்காசிய நிர்வாக இயக் குநர் திரு ஸ்டீவன் லிம் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

'ஹூகோ பாஸ்' ஆடையில் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங். படம்: ஹூகோ பாஸ்