கேப் டவுன்: ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தைச் சேதப்படுத் தியதை கேமரா வைத்து, கையும் களவுமாக பிடித்தவர் தென்னாப் பிரிக்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஃபானி டி வில்லியர்ஸ் என்று தெரிய வந்துள்ளது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகளில் 1=1 என இரு அணிகளும் வெற்றி பெற்றன. ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் மஞ் சள் நிறத்திலான ஒரு பொருளை வைத்துப் பந்தின் மீது தேய்த்த காட்சி கேமராவில் பதிவானது. கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலி யாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை கண்டுபிடித்தவர் முன்னாள் தென் னாப்பிரிக்க சுழற்பந்து வீரர் ஃபானி டி வில்லியர்ஸ். இவர் போட்டி ஒளிபரப்பு நிறுவனத் துடன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் கூறும்போது, "ஆடுகளத்தில் புற்கள் இருக்கும்போது அது 'ரிவர்ஸ் ஸ்விங்' ஆவது சாத்தி யமே இல்லை. பாகிஸ்தான் உள் ளிட்ட ஆசிய ஆடுகளங்களில் தான் 20 ஓவர்கள் முதலே அது சாத்தியம். "ஆனால் 25, 26வது ஓவர் களில் ஆஸ்திரேலிய வீரர்களால் 'ரிவர்ஸ் ஸ்விங்' செய்ய முடிகிறது என்றால், ஏதோ செய்கிறார்கள் எனச் சந்தேகித்தேன். "அதன் அடிப்படையில் எங் களது கேமரா குழுவினரிடம் பந்தை ஏதோ செய்கிறார்கள், அதன் மீது கவனம் செலுத்துங்கள் என்றேன். "சுமார் ஒன்றரை மணிநேர அலசலுக்குப் பின்னர், பான் கிராஃப்ட் மறைத்து வைத்திருந்த ஒரு உலோகம் கொண்டு பந்தைத் தேய்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது," என்றார்.

