காலிறுதிக்கு முன்னேறினார் வீனஸ் வில்லியம்ஸ்

1 mins read
e2778036-1cc3-4298-8486-3a81c6ed2d4b
-

மியாமி: ஏழு முறை கிராண்ட்சிலாம் வெற்றியாளரான வீனஸ் வில்லியம்ஸ் (படம்) மியாமி பொது விருது டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த நான்காவது சுற்றில் நடப்பு வெற் றியாளரான ஜோகன்னா கோன் டாவைச் சந்தித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இப்போட்டியில் 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகன்னாவை வீழ்த்தினார் வீனஸ் வில்லியம்ஸ். இதன் மூலம் கடந்தாண்டு இப்போட்டியில் அரையிறுதியில் ஜோகன்னாவிடம் தோற்றதற்கு இம்முறை பழி தீர்த்துக்கொண்டார் வீனஸ் வில்லியம்ஸ்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா, எடுவர்ட் ரோஜர் வாசெலின் இணை 6-7 5-7, 2-6 என்ற செட் கணக்கில் அமெரிக்க இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.