நெதர்லாந்திடம் மண்ணைக் கவ்விய போர்ச்சுகல்

நெதர்லாந்திடம் மண்ணைக் கவ்விய போர்ச்சுகல்

1 mins read
7abcf7a0-8f54-490e-8ba0-4b1ab7a028f3
-

ஜெனிவா: அனைத்துலக நட்பு முறை காற்பந்தாட்டம் ஒன்றில், நெதர்லாந்து குழுவிடம் ஐரோப்பா வின் முன்னணி குழுவான போர்ச் சுகல் மண்ணைக் கவ்வியது. நட்சத்திர வீரரான ரொனால் டோவைக் கொண்டுள்ள போர்ச்சு கல் கோல் எதுவும் போடாமல் அதிர்ச்சித் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு ஏமாற் றத்தை அளித்துள்ளது. முதல் அரை மணி நேரத் திலேயே நெதர்லாந்தின் வெற்றி ஓரளவு உறுதியானது.

முன்னாள் மேன்யூ வீரர் மெம்பிஸ் டிபேவும் முன்னாள் லிவர்பூல் விளையாட்டாளர் ரையன் பேபல் இருவரும் 11, 32வது நிமி டத்தில் கோல் போட்டு நெதர் லாந்தை முன்னிலை பெறச் செய் தார். லிவர்பூல் வீரரும் நெதர்லாந்து குழுவின் புதிய தலைவருமான வெர்ஜில் வேன் டிக் முதல் பாதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தின் போது இன்னொரு கோலைப் போட்டு தனது குழுவின் வெற்றியை உறுதி செய் தார். ஆனால் இரண்டாம் பாதியில் நெதர்லாந்தை மேலும் கோல் போடவிடாமல் பார்த்துக் கொண் டது போர்ச்சுகல்.

நெதர்லாந்து வீரரிடம் இருந்து பந்தைத் தட்டிப் பறிக்கும் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி