கிரிக்கெட் சங்க நிர்வாகி ராஜன் நாயருக்கு 20 ஆண்டுகள் தடை

கிரிக்கெட் சங்க நிர்வாகி ராஜன் நாயருக்கு 20 ஆண்டுகள் தடை

1 mins read
477a6480-2f2b-42ba-a2d6-c2334fefd739
-

ஹராரே: ஸிம்பாப்வே கிரிக்கெட் அணித் தலைவர் கிர்மரை, அந்த நாட்டில் உள்ள ஹராரே மாநகர கிரிக்கெட் சங்க பொருளாளரும், மார்க் கெட்டிங் இயக்குனருமான ராஜன் நாயர் கடந்த ஆண்டு கிரிக்கெட் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) செய்வது குறித்து அணுகி பேசினார். இது குறித்து கிரீமர் உடனடியாக அனைத்துலகக் கிரிக்கெட் மன்றத்திடம் (ஐ.சி.சி.) புகார் தெரிவித்தார். இந்தச் சம்ப வம் குறித்து கிரிக்கெட் மன்றத் தின் ஊழல் தடுப்புப் பிரிவு விசார ணை மேற்கொண்டது. இதில் சூதாட்டத்துக்காக கிரீமருடன் தொடர்புகொண்டதை ராஜன் நாயர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கிரிக்கெட் தொடர்பான நடவடிக் கை களில் பங்கேற்க ராஜன் நாயருக்கு 20 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்