புதுடெல்லி: டேவிட் வார்னர் (படம்) ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் சன் ரைசஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணித் தலைவர் பதவி யில் இருந்து விலகுவதாக ஸ்மித் அறிவித்தார். இதனால் அந்த அணியின் தலைவர் பதவிக்கு ரஹானே அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது. வீரர்கள் அறை யில் இரு அணிகளின் வீரர்கள் மோதல், களத்தில் மோதல், ரசிகர்களுடன் வாக்குவாதம் என பல சர்ச்சைகளில் சிக்கியது ஆஸ் திரேலியா. அத்துடன் புதிதாக பந்தைச் சேதப்படுத்திய பிரச்சினை யில் சிக்கியது. அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தின் உதவியுடன் புதுமுக வீரர் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார்.
இது காணொளிப் பதி வில் தெளிவாகத் தெரிந் தது. எனவே பந்தை சேதப் படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் சுமித் தின் அணித் தலைவர் பதவியும், வார்னரின் துணைத் தலைவர் பதவி யும் பறிக்கப்பட்டன.

