சிட்னி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் பந்தைச் சேதப் படுத்தி மோசடி செய்ய முன்கூட்டியே திட்ட மிட்டதற்காக குற் றம்சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், துணைத் தலைவர் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் ஆடத் தடை விதித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பந்தை சேதப்படுத்திய தொடக்க வீரர் கேமரன் பேன் கிராப்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலை யில் தடையை எதிர்த்து வீரர்கள் மேல் முறையீடு செய்யலாம். ஆஸ்திரேலியாவுக்கு வீரர்கள் திரும்பும் முன் ஜேம்ஸ் சதர் லேண்ட் இந்த தடை உத்தரவை வீரர்களிடம் தெரிவித்தார், சிட்னியில் வந்திறங்கிய பிறகு ஸ்மித் செய்தியாளர்களைச் சந் திப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு ஸ்மித் தன் சகவீரர்களிடம் விஷயத்தைத் தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரி விக்கின்றன. அடுத்த ஆஸ்திரேலிய உள் நாட்டு கோடைகால கிரிக்கெட் வரை ஸ்மித், வார்னர், பேன்க் ராப்ட் எந்தவிதமான கிரிக் கெட்டையும் ஆட முடியாது. ஆனால் கிரேடு கிரிக்கெட்டில் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.

