ஹைதராபாத் அணியின் புதிய தலைவர்

ஹைதராபாத் அணியின் புதிய தலைவர்

1 mins read
3752cf45-155f-4beb-a567-f3ebc6929ea8
-

ஹைதராபாத்: அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்கவுள்ள பதினோராவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு வெற்றியாளரான ஹைதரா பாத் அணிக்குத் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தலைவராக அறிவிக்கப் பட்டிருந்தார். ஆனால், பந்தைச் சேதப் படுத்திய விவகாரத்தில் அவர் சிக்கியதால் அவரிடமிருந்து தலைமைப் பதவி பறிக்கப்பட்டது. அத்துடன், அவரும் ஸ்டீவன் ஸ்மித்தும் ஐபிஎல் தொடரைவிட்டே நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஹைதராபாத் அணித்தலைவராக இந்திய வீரர் ‌ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு வில்லியம்சனிடம் சென்றுள்ளது. பதினோராவது ஐபிஎல் அணிகளில் விளையாடும் மற்ற ஏழு அணிகளுக்கும் இந்திய வீரர்களே தலைவர்களாகச் செயல் படவிருக்கும் நிலையில், ஒரு ஒரு வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகியுள்ளார் வில்லியம்சன்.