கதறியழுத ஸ்டீவன் ஸ்மித்

1 mins read
c1f4e302-d4f9-4190-be47-de8eb7cb69c2
-

சிட்னி: தென்னாப்பிரிக்க அணிக் கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது பந்தைச் சேதப் படுத்தியதால் ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், துணைத் தலைவர் டேவிட் வார்னர், தொடக்க ஆட்டக்காரர் கேமரன் பேன்கிராஃப்ட் ஆகியோ ருக்குத் தற்காலிகத் தடை விதிக் கப்பட்டுள்ளது. பந்து 'ரிவர்ஸ் ஸ்விங்' ஆகும் வகையில் பேன்கிராஃப்ட் அதை மெருகுதாள் கொண்டு தேய்த்தார். காணொளி ஆதாரம் இருந்ததால் தமது தவற்றை அவர் ஒப்புக் கொண்டார்.

அவரை அப்படிச் செய்யச் சொன்னவர் வார்னர். அதற்கு ஸ்மித்தும் ஒப்புதல் அளித்தார். காணொளியில் தெளிவாகத் தெரிந்ததால் 'திட்டமிட்டே அப்படிச் செய்ததாக' செய்தியாளர்கள் முன் ஸ்மித்தும் பேன்கிராஃப்ட்டும் தங்களது தவற்றை ஒப்புக்கொண் டனர். உடனடியாக ஸ்மித், வார்னரின் தலைமைப் பதவிகள் பறிக்கப்பட்டன. ஸ்மித்துக்கு ஓர் ஆட்டம் தடை விதித்த அனைத் துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி), ஆட்டத் தொகை முழுவதையும் அபராதமாகச் செலுத்தவும் உத்தர விட்டது. பேன்கிராஃப்ட்டுக்கு 75% அபராதம் விதிக்கப்பட்டது.