கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் காப்பாளர் ஜோனதன் பேர்ஸ்டோ கைகொடுத்ததால் இங்கிலாந்து அணி சரிவிலிருந்து தப்பியது. இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி யில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று தொடங் கிய இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்யும் நோக்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன.
மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரெய்க் ஓவர்ட்டன் ஆகியோருக் குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ், மார்க் உட், ஜாக் லீச் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இடது கை சுழற் பந்து வீச்சாளரான ஜாக் லீச்சுக்கு அனைத்துலக அரங்கில் இதுவே முதல் ஆட்டம். நியூசிலாந்து அணியில் சுழற் பந்து வீச்சாளர் டாட் ஆஸ்டிலுக்குப் பதிலாக இந்தர்பீர் சிங் சோதி இடம்பெற்றார்.
நியூசிலாந்து வீரர் டிம் சௌத்தியின் வேகப்பந்து வீச்சில் ஸ்டம்ப்பைப் பறிகொடுத்த இங்கிலாந்தின் மார்க் உட். படம்: ராய்ட்டர்ஸ்

