சிட்னி: முன்னணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பதினோராவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். அவரது வலது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவப் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஸ்டார்க் நாடு திரும்பவுள்ளார். கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் ஸ்டார்க் விலகியிருப்பது கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் நடந்த ஏலத்தில் கோல்கத்தா அணி 9.4 கோடி ரூபாய்க்கு ஸ்டார்க்கை ஏலம் எடுத்திருந்தது.
ஐபிஎல்: மிட்செல் ஸ்டார்க் விலகல்
1 mins read

