முக்கிய ஆட்டங்களால் நெருக்கடி

முக்கிய ஆட்டங்களால் நெருக்கடி

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் நிலையிலுள்ள மான் செஸ்டர் யுனைடெட் குழுவைவிட 16 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தில் வலுவாக அமர்ந்து இருக்கும்போதும் அடுத்த 12 நாட்களுக்குள் நான்கு முக்கிய ஆட்டங்களில் விளையாட வேண் டிய நெருக்கடியில் மான்செஸ்டர் சிட்டி குழு இருக்கிறது. இன்று பின்னிரவில் நடக்கும் இபிஎல் ஆட்டத்தில் எவர்ட்டன் குழுவை அதன் சொந்த குடிசன் பார்க் விளையாட்டரங்கில் எதிர் கொள்ளும் சிட்டி, அடுத்த வார மத்தியில் சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் லிவர்பூல் குழுவுடன் மோதவேண்டும். பின் அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முக்கிய இபிஎல் ஆட்டத்தில் மான் செஸ்டர் யுனைடெட் குழுவுடன் மல்லுக்கட்ட இருக்கும் சிட்டி, மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் லிவர்பூல் குழுவுடன் பொருதவேண்டியுள்ளது.

இப்படி அடுத்தடுத்து போட்டி கள் இருந்தாலும் கிட்டத்தட்ட அனைத்து ஆட்டக்காரர்களும் உடற்தகுதியுடன் ஆயத்தமாக இருப்பது சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலாவிற்குச் சற்று நிம்ம தியை அளித்துள்ளது.