ஐபிஎல்: ஸ்மித் இடத்தை பிடித்த தென்னாப்பிரிக்க வீரர் கிளாசன்

2 mins read

ஜெய்ப்பூர்: தென்னாப்பிரிக்கா விற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பந்தைச் சேதப் படுத்திய விவகாரத்தில் ஆஸ்தி ரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித், பேன்கிராஃப்ட் ஆகியோருக்கு 9 மாதம் முதல் ஓராண்டு வரை தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வார்னர், ஸ்மித் இருவரும் இந்தியாவின் ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வார்னருக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அலெக்ஸ் ஹேல்சைத் தேர்வு செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஏலம் போக வில்லை. இதனால் ஹைதராபாத் அணி எளிதாக அவரை எடுத்துக் கொண்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்மித்தின் வெற்றிடத்தை நிரப்பக் கூடிய வகையில் சரியான நபரை தேடிக்கொண்டிருந்தது. இந்நிலை யில் ஸ்மித்திற்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க வீரர் கிளாசனை ஐபிஎல்: ஸ்மித் இடத்தை பிடித்த தென்னாப்பிரிக்க வீரர் கிளாசன் நேற்று தேர்வு செய்தது. இந்தியா = தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடரின்போது மாற்று விக்கெட் காப்பாளரான ஹென் ரிக் கிளாசன், சகலின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தார்.

இதனால் சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க கிளாசனைத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இதுகுறித்து கிளாசன் கூறுகையில், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடு வதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கூறுகிறேன். இது என் னுடைய முதல் ஐபிஎல் தொட ராகும். அத்துடன் முதல் இந்தியப் பயணம் ஆகும். "சிறந்த வீரர்களுடன் ஓய் வறையில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார். ஐபிஎல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கிளாசனின் அடிப் படை விலையான 50 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி அவரை ஏலம் எடுத்துள்ளது.