செல்சிக்குப் பேரிடியாக விழுந்த அலியின் கோல்கள்

1 mins read
941259fa-05d0-4bf5-9a9a-0c1dff1daf56
-

லண்டன்: இரு காற்பந்துக் குழுக் களும் சமநிலையில் இருந்தபோது, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் வீரர் டெலி அலியின் இரட்டை கோல் செல்சியை விழுங்கியது. கடந்த இரு வாரங்களுக்கு முன் நெதர்லாந்துக்கு எதிரான அனைத்துலக நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்து குழுவிற் காக விளையாடிய டெலி அலி கோல் எதுவும் போடவில்லை. எனவே இத்தாலிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவர் களம் இறக்கப்படவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலை யில், நேற்று நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் செல் சிக்கு எதிரான ஆட்டத்தில் அதி ரடியாக விளையாடினார் அலி. இந்த ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் விழுந்த செல்சியின் முதல் கோலை 45வது நிமிடத்தில் சமன் செய்தார் ஸ்பர்சின் எரிக்சன். பிற்பாதி ஆட்டத்தின் போது எரிக் டியரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பந்து, தன்னிடம் வந்த வேகத்திலேயே அதைக் கோலாக்கி விட்டார் டெலி அலி. 62வது நிமிடத்தில் விழுந்த இந்தக் கோலால் 2-1 என முன் னிலை பெற்றது ஸ்பர்ஸ். அடுத்த நான்கு நிமிடங்களுக்குள் டெலி அலி இன்னோர் கோலையும் போட் டார்.

இதனால் 3-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பர்ஸ், 28 ஆண்டுகளுக்குப் பிறகு செல் சியைத் தோற்கடித்தது. அதுவும் செல்சியின் சொந்த மண்ணில் அந்த அணியை மண்ணைக் கவ்வச் செய்தது குறிப்பிடத்தக்கது.