கராச்சி: 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ் தானிடம் மண்ணைக் கவ்வியது. தீவிரவாத அச்சுறுத்தல்களால் அனைத்துலக அணிகள் எதுவும் பாகிஸ்தான் செல்வதைத் தவிர்த்து வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முயற்சி யால் தற்போது அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக் கெட் மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் பூவா தலையா வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பந்தடித்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் குவித்தது. மாலிக் 14 பந்துகளில் 37 ஓட்டங்களும் பஹீம் 9 பந்துகளில் 16 ஓட்டங்களும் எடுத்தனர். இதையடுத்து 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
பாகிஸ்தானிடம் மண்ணைக் கவ்வியது வெஸ்ட் இண்டீஸ்
1 mins read

