என் கணவரின் செயலுக்கு நான்தான் காரணம்: வருந்தும் வார்னரின் மனைவி

என் கணவரின் செயலுக்கு நான்தான் காரணம்: வருந்தும் வார்னரின் மனைவி

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பந்தை சேதப் படுத்திய செயலுக்கு நான் தான் காரணம் என அவரது மனைவி கேன்டிஸ் வார்னர் வருந்துகிறார். பந்தைச் சேதப்படுத்தும் விவகாரத்திற்கு முன்னர் 2வது டெஸ்ட் போட்டியின்போது வார் னரின் மனைவி கேன்டிசை அவரது முன்னாள் காதலர் வில்லியம்சுடன் இணைத்து தென்னாப்பிரிக்க வீரர் டி காக் தரக்குறைவாகப் பேசியதால் அவருக்கும் வார்னருக்கும் இடையே தகராறு மூண்டது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் இரு வரும் ரசிகர்களுடன் சேர்ந்து வில்லியம்சின் முகமூடி அணிந்து கிண்டல் செய்தது வார்னரைக் கோபத்தின் உச் சிக்குக் கொண்டு சென்றது. இதனால் எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நோக்கில் 3வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்த வார்னர் திட்ட மிட்டதாகக் கூறப்படுகிறது.