கிளோப்பை வீழ்த்த கார்டியோலா வியூகம்

1 mins read
6c76fe03-384e-4783-8822-69e3128551bd
-

லிவர்பூல்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் காலிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த குழுக் கள் பட்டியலில் உள்ள லிவர்பூலும் மான்செஸ்டர் சிட்டியும் மோதுகின் றன. லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் மைதானத்தில் சிங்கப்பூர் நேரப்படி நாளை அதிகாலை 2.45 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த ஆட்டம் இரு குழுக்களின் நிர்வாகிகளான கிளோப்பிற்கும் கார்டியோலாவிற் கும் இடையேயான மோதலாகவே பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பிரிமியர் லீக்கின் முன்னணி குழுக்களான இவை இரண்டும் அபாரமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப் படுத்துவதில் வல்லவர்கள் என் பதாலும் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாகவும் விறுவிறுப்பாகவும் அமையும் என்பதில் எந்த சந்தே கமும் இல்லை.

பிரிமியர் லீக் பட்டத்தை வெல்லப் போகும் சிட்டி, கடந்து வந்த வெற்றிப் பாதையில் சற்று சறுக்கலை ஏற்படுத்தியது லிவர் பூல். எனவே கடந்த ஜனவரி மாதம் லிவர்பூலிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் முனைப் பில் உள்ளது மான்செஸ்டர் சிட்டி. ஆனால், நிர்வாகிகளுக்கு இடையிலான வரலாற்றைப் பார்க் கும்போது வெற்றி வாய்ப்பு லிவர்பூல் நிர்வாகி கிளோப்பிற்கே உள்ளதாகத் தோன்றுகிறது. தற்போதைய குழுக்கள் உட்பட முந்திய குழுக்களின் நிர்வாகி களாக இருந்தபோது கிளோப்பும் கார்டியோலாவும் 12 ஆட்டங்களில் மோதியுள்ளனர். இவற்றில் கிளோப் 6ல் வெற்றி பெற கார்டி யோலா 5 வெற்றிகளை மட்டுமே பெற்றார்.