சிட்னி: பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி, கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப் பெற்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அந்தத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை எனத் தெரிவித்து உள்ளார். "தடை விதித்ததன் மூலம் தவறிழைப்போர் கடுமையாக தண் டிக்கப்படுவர் என்பதை ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் சங்கம் உணர்த் தியுள்ளது. அதனால், அதை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்யமாட்டேன்,' என்று ஸ்மித் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவருடன், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது பந்தைச் சேதப் படுத்திய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் கேமரன் பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதங்கள் தடையும் டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரி சீலனை செய்யவேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக் காரர்கள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.

