லண்டன்: ஏரன் ராம்சியும் அலெக்சாண்டர் லக்காஸெட்டும் ஆளுக்கு இரு கோல்களை அடிக்க, யூரோப்பா லீக் காற்பந்து காலிறுதிச் சுற்று முதல் ஆட்டத் தில் ஆர்சனல் குழு 4=1 என்ற கோல் கணக்கில் சிஎஸ்கேஏ மாஸ்கோ குழுவை மண்ணைக் கவ்வச் செய்தது. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் ராம்சி, ஆர்சனலின் கோல் வேட் டையைத் தொடங்கி வைத்தார். முற்பாதியின் 35 நிமிடங்களுக்கு உள்ளாக ஐந்து கோல்களும் விழுந்தன. முதல் பாதியில் பிரமிக்க வைக்கும்படியாக விளையாடிய ஆர்சனல், பிற்பாதியில் மேலும் கோலடிக்க முடியாமல் போனது ஏமாற்றம் தருவதாக இருந்தது.
சொந்த அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் மூன்று கோல் கள் வித்தியாசத்தில் வென்ற போதும் "பாதி வேலைதான் முடிந் துள்ளதாக" குறிப்பிட்டார் ஆர் சனல் நிர்வாகி வெங்கர். "எதார்த்த நிலையை உணர வேண்டும். 2வது ஆட்டத்திலும் வென்று அரையிறுதிக்கு முன் னேறுவதே சிறப்பானதாக இருக் கும்," என்றார் அவர். மற்றோர் ஆட்டத்தில் அட்லெட் டிகோ மட்ரிட் 2=0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் லிஸ்பன் குழுவைத் தோற்கடித்தது. முதல் நிமிடத்தில் கோக்கியும் 40வது நிமிடத்தில் கிரீஸ்மனும் அந்த கோல்களைப் போட்டனர்.
பின்னங்கால் மூலம் பந்தை வலைக்குள் தள்ளி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஆர்சனல் குழுவின் ராம்சி. படம்: ஏஎஃப்பி

