கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் போட்டிகளை ஏற்று நடத்தும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, பூப்பந்து விளையாட்டின் அரை இறுதிக்கு முன்னேறியது சிங் கப்பூர் குழு. அரையிறுதியில் சிங்கப்பூரும் இந்தியாவும் இன்று மோதவிருக்கின்றன. முதலில் நடந்த கலப்பு இரட் டையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வின் மேத்யூ சுவா - சேத்யானா மபாசா இணை கடும் சவால் அளித்தாலும் இறுதியில் வெற்றி டெரி ஹீ-டான் வெய் ஹான் இணை வசமாகியது. செட் விவரம்: 21-17, 18-21, 21-16.
அடுத்து நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் வென்று சிங்கப்பூரின் முன்னிலையை இரட்டிப்பாக்கி னார் லோ கியன் இயூ. உலகத் தரவரிசையில் 225ஆம் நிலையில் இருக்கும் லோ, தம்மை எதிர்த்தாடிய அந்தோணி ஜோவை 21-8, 21-6 என நேட் செட்களில் மிக எளிதாக வென்றார். பிறகு நடந்த ஆடவர் இரட் டையர் ஆட்டத்தில் ஹீ- டேனி பாவா கிறிஸ்டினா இணை 21-15, 21-14 என நேர் செட்களில் ராபின் மிடில்டன் - ரோஸ் ஸ்மித் இணையை வென்று, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

