தங்கம் வென்றார் தமிழகத்தின் சதீஷ்குமார்

தங்கம் வென்றார் தமிழகத்தின் சதீஷ்குமார்

2 mins read
c5764681-d004-4495-ad47-1e443f94957f
-

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியா வில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களில் தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம், 25, தங்கம் வென்று, இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். கிளாஸ்கோவில் 2014ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவரான சதீஷ், இம்முறையும் தங்கத்தைத் தட்டிச் சென்றார். 'ஸ்நாட்ச்' பிரிவின் மூன்று முயற்சிகளில் 136 கிலோ, 140 கிலோ, 144 கிலோ எடையையும் 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் முதலிரு முயற்சிகளில் 169 கிலோ, 173 கிலோ எடையையும் இவர் வெற்றிகரமாகத் தூக்கினார்.

இரண்டாவதாக வந்த இங்கி லாந்தின் ஜேக் ஓலிவர் 171 கிலோ எடையையே தூக்க முடியாமல் போனதால் சதீஷ் 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவின் மூன்றாவது முயற் சியில் எடையைத் தூக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மொத்தம் 317 கிலோ எடை யைத் தூக்கி சதீஷ் தங்கம் வென் றதன் மூலம் நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் மட்டும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. அதில் மூன்று தங்கமும் ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமும் அடங்கும். முன்னதாக, 2015ல் ஆஸ்திரே லியாவில் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்‌ஷிப் போட்டியிலும் 77 கிலோ பிரிவில் சதீஷ் மொத்தம் 320 கிலோ எடையைத் தூக்கி தங்கத்தைக் கைப்பற்றியிருந்தார். இதையடுத்து, இரு வேறு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆடவர் என்ற பெருமை இவரைச் சென்றடைந்தது. 2018-04-08 06:10:00 +0800