'போக்பாவை விற்கும் எண்ணமில்லை'

1 mins read
8c35c02e-18df-4880-8970-b02d327f58ef
-

மான்செஸ்டர்: பிரெஞ்சு காற்பந்து வீரர் பால் போக்பாவை (படம்) மான்செஸ்டர் சிட்டி குழுவிற்கு விற்பது குறித்து யோசிக்கவில்லை என்று மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் சொன்னதாக 'ஈஎஸ்பிஎன்' செய்தி கூறுகிறது. கடந்த ஜனவரியில் போக்பாவையும் அப்போதைய யுனைடெட், இன்றைய ஆர்சனல் வீரரான மகிதார்யானையும் ஒப்பந்தம் செய்ய சிட்டிக்கு வாய்ப்பு கிட்டியதாக அதன் நிர்வாகி கார்டியோலா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, போக்பாவும் கார்டியோலாவின் கூற்றால் குழப்பமடைந்து, தாம் காதைத் தீட்டிக்கொண்டு கேட்கும்படியான படத்துடன், "என்ன சொல்கிறீர்கள்?" என்ற வாசகத்தையும் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.