கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் நேற்று மகளிருக்கான '10 மீட்டர் ஏர் ரைபிள்' துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பகேர் தங்கப் பதக்கமும் ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மேலும், மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா இதுவரை ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. மனு பகேருக்கு 16 வயதுதான் ஆகிறது. சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜூனியர் உலகக் கிண்ணப் போட்டியிலும் அவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது
தங்கம் வென்ற 16 வயதுப் பெண்
1 mins read

