மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனை டெட்டை எளி தில் வீழ்த்தி லீக் சாம்பியன் பட்டத்தை வென்று விடலாம் என்று மான்செஸ்டர் சிட்டி கண்ட கனவை பால் போக்பா சிதைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் இரண்டு கோல் களுடன் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டு இருந்த சிட்டியின் ஆட் டக்காரர்கள் இரண்டாம் பாதியில் அந்தக் களிப்பு பறிபோகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. காரணம், அணித் தலைவர் வின்சென்ட் கொம்பானியும் இல்கே குண்டோகனும் முறையே 25வது, 30வது நிமிடங்களில் ஆளுக்கு ஒரு கோல் போட்டு சிட்டியை வெற்றியின் விளிம்பில் வைத்தி ருந்தனர். பாதி ஆட்டம் வரை யுனைடெட் வீரர்களின் கால்கள் பலவாறாகச் சுழன்றபோதிலும் கோல்கள் விழ வில்லை. 53வது நிமிடத்தில் அதிசயம் நிகழ்ந்தது. வீறுகொண்டு எழுந்த பால் போக்பா 97 விநாடிகளில் அடுத்தடுத்து இரு கோல்களைப் போட்டு சிட்டிக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தினார். வெற்றி திசை மாறக் காத்திருந்தது.
வெற்றியின் விளிம்பில் இருந்த சிட்டியை திடீரென்று புறப்பட்ட போக்பா 97 விநாடிகளில் இரு கோல்களைப் புகுத்தி நிலைகுலையச் செய்தார். விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் அவர் இப்படி பறந்து பாய்ந்தார். படம்: ராய்ட்டர்ஸ்

