மகுடம் சூடிய இந்தியப் பூப்பந்து அணி

மகுடம் சூடிய இந்தியப் பூப்பந்து அணி

1 mins read
26a752fc-b90e-4e14-83f4-37821403ef32
-

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் கலப்பு அணி பூப்பந்தில் இந்தியா முதல் முறையாக நேற்று தங்கம் வென்று வரலாறு படைத்தது. பலம் பொருந்திய மலேசியா அணியை எதிர்கொண்ட இந்தியா, கடுமையாகப் போராடி 3-1 என வாகை சூடியது. முதல் ஆட்டத்தில் மலேசியா வின் பெங் சூன் சான்-லியூ யிங் கோ ஜோடியை இந்தியா வின் ரன்கிரெட்டி=அஸ்வின் பொன்னப்பா ஜோடி 21-14, 15-21, 21-15 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது.

அடுத்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா வின் ஸ்ரீகாந்த் கிடம்பியும் மலேசியப் பூப்பந்து சகாப்தம் லீ சோங் வெய்யும் மோதினர். இதில் ஸ்ரீகாந்த் 21-17, 21=14 என்று நேர்செட் கணக் கில் வெற்றி பெற்றார். இந்நிலையில், மலேசியாவின் வி.ஷெம் கோ-வீ கியோங் டான் ஜோடியிடம் இந்தியா வின் ரன்கிரெட்டி-ஷிராக் ஷெட்டி ஜோடி 15-21, 20-22 என்று நேர்செட் கணக்கில் தோற்றது.

தங்கம் வென்ற மகிழ்ச்சியில் இந்தியப் பூப்பந்து வீரர்கள், வீராங்கனைகள். படம்: ராய்ட்டர்ஸ்