சிங்கப்பூரின் தங்க மகள் மார்ட்டினா லிண்ட் சே வெலோசா

சிங்கப்பூரின் தங்க மகள் மார்ட்டினா லிண்ட் சே வெலோசா

1 mins read
317e48ed-301d-490f-af24-2c301613fb1d
-

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலி யாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அதன் முதல் தங்கப் பதக்கத்தை நேற்று வென்றது. மகளிருக்கான 10 மீட்டர் குறி பார்த்துத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை மார்ட்டினா லிண்ட் சே வெலோசா, 18, வென்று முதலாவதாக வந்தார். அவரிடம் தோல்வியுற்ற இந்தியாவின் மெஹுலி கோஷ், 17, வெள்ளிப் பதக்கமும் மற்றோர் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா வெண்கலப் பதக்கமும் பெற்றனர். வெலோசா 10.3 புள்ளிகளும் கோஷ் 9.9 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த நிலையை அடைந் தனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோ விளையாட்டுகளில் ஐந்தாவது இடம் பெற்ற அந்த சிங்கப்பூர் வீராங்கனை காமன் வெல்த் விளையாட்டுகளில் நேற்று தமது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். இருப்பினும் தங்கப் பதக்கம் அவருக்குப் புதிதல்ல. கடந்த ஆண்டு கோலா லம்பூரில் நடைபெற்ற தென் கிழக்காசிய விளையாட்டு களிலும் இதே 10 மீட்டர் குறிபார்த்துத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் அவர் முதலா வதாக வென்று தங்கப் பதக் கத்தைத் தட்டிச்சென்றது குறிப் பிடத்தக்கது. காமன்வெல்த் போட்டிகளில் சிங்கப்பூரின் மற்றொரு துப்பாக்கி சுடும் வீராங்கனை டெஸ்ஸா நியோ, 18, எட்டாவது இடத்தில் போட்டியை முடித்துக் கொண்டார்.

மார்ட்டினா வெலோசா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்