சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் தலைமைப் பயிற்று நர் பொறுப்பிலிருந்து வி.சுந்தர மூர்த்தி விலகிவிட்டார். அவர் அந்தப் பொறுப்பில் கிட்டத்தட்ட ஈராண்டுகள் இருந்தார். அவர் பதவி விலகும் முடிவு இருதரப்பு ஒப்புதலின் பேரில் எடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித் தது. தமது முடிவு குறித்து கருத்துத் தெரிவித்த சுந்தர மூர்த்தி, 52, "தேசிய காற்பந்து அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த கௌரவம். அணியினருடனும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தின் எனது சகாக்களுடனும் இணைந்து பணியாற்றியது நேசத்துடன் நினைத்துப் பார்க்க வேண்டிய அனுபவம். "மேலும், எனக்குக் கிடைத்த ஓர் அற்புதமான கற்றல் அனுப வமாகவும் அந்தப் பொறுப்பு இருந்தது.
"காற்பந்துச் சங்கமும் விளையாட்டாளர்கள், ரசிகர்கள் ஆகியோரும் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றிக்கடன் பட்டி ருக்கிறேன். இந்த ஆண்டின் பிற்பாதியில் நடைபெறவிருக்கும் ஆசியான் காற்பந்துச் சம் மேளன சுசுகி கிண்ணத்திற் காகத் தயாராகி வரும் அணி சிறந்த முறையில் செயல்பட எனது வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்," என்று திரு சுந்தரமூர்த்தி தெரிவித் துள்ளார். சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தலைவர் லிம் கியா டோங் கூறு கையில், "சிங்கப்பூரின் காற்பந்து ஜாம்பவான்களில் ஒருவராக சுந் தரமூர்த்தி நீண்டகாலம் பரிணமித்தார்.

