25மீ. துப்பாக்கி சுடும் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்து வெளியேறிய சிங்கப்பூரர்

1 mins read

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 25 மீட்டர் குறி பார்த்து துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் டெ ஸியூ ஹோங் 5வது இடத்தைப் பிடித் துள்ளார். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று 8 பேர் பங்குபெற்ற இறுதிப் போட்டியில் காலடியெடுத்து வைத்த 24 வயது தே ஸியூ ஹோங் இறுதிப் போட்டியில் நடந்த தகுதியிழப்புச் சுற்றில் முன்­னேற முடியவில்லை. நான்காவது போட்டியாளராக விளையாடிய தே, மால்ட்டாவின் எலெனோர் பெஸ்ஸி­னா­விடம் தோற்று 19 புள்ளிகளுடன் வெளி­யேற்றப்பட்டார்.

இதுபற்றி கூறிய தே, "என்னால் இயன்றவரை சிறப்பாக விளையாடினேன். இருப்பினும் இறுதிப் போட்டியில் இன்னும் சற்று முயற்சி செய்திருக்கலாம். இருந்தாலும் நான் இதுவரையிலும் விளை யாடியதைக் காட்டிலும் இந்த விளையாட்டில் சற்று சிறப்பாகவே செய்தேன். எனக்கு இறுதிப் போட்டிகளில் பங்குபெற்ற அனுபவம் குறைவே. மேலும் அதிகமான இறுதிப் போட்டிகளில் நான் பங்குபெறவேண்டும். அப்­போதுதான் என்னால் கற்றுக்­ கொள்ள முடியும்," என்றார்.