சிட்னி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து வருகின்றன. இந்தியா 10 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில் நேற்று 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்தன. இதன் மூலம், காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு 11வது தங்கம் கிடைத்துள்ளது. இதில் ஹீனா சித்து தங்கம் வென்றார். இவர் ஏற்கெனவே 10மீ. 'ஏர் ரைபிள்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே காமன்வெல்த் போட்டித்தொடரில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஹீனா மீண்டும் பதக்கம் பெற்றார்
1 mins read

