வாள் வீச்சில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்கப்பூர் பெண்கள்

2 mins read
84476137-c18e-4fd6-a86e-6db6d0e93de0
-

வெரோனா (இத்தாலி): இத்தாலி­யில் நேற்று முன்தினம் நடந்த இளையர் மற்றும் பயிற்சி மாணவர்களுக்கான உலகக் கிண்ண மகளிர் வாள் வீச்சுப் போட்டியில் சிங்கப்பூர்ப் பெண்கள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். பதிமூன்றாவது இடத்தில் இருந்த சிங்கப்பூர் வாள் வீச்சு வீரர்கள் நான்காவது இடத்தில் உள்ள போலந்து, ஐந்தாவது இடத் தில் உள்ள பிரான்ஸ், எட்டாவது இடத்தில் உள்ள ஜெர்மனி ஆகிய அணிகளை எதிர்கொண்டு இறுதி ஆட்டம் வரை சென்றது. இருப்பினும் தங்கப் பதக்­கத்தை அமெரிக்க விளையாட்டாளர்­ களிடம் 30-45 என்ற புள்ளிக் கணக்கில் கோட்டை விட்டது. வெள்ளிப் பதக்கத்தை சிங்கப்­பூரின் விளையாட்டாளர்கள் நிகோல் வோங், டாட்டியானா வோங் ஆகிய 19 வயது இளை­யர்களும் அமித்தா பெர்த்தியர், மேக்ஸின் வோங் ஆகிய 17 வயது இளையர்களும் வென்றனர். இவர்கள் 20 வயதுக்குக் கீழா­னோருக்கான பிரிவில் விளை­ யாடினர்.

மாணவர்களுக்கான போட்டி­யில் 17 வயதுக்குக் குறைந்த வாள் வீச்சாளர்கள் பங்­கேற்றனர். இத்துடன் உலகக் கிண்ண வாள் வீச்சுப் போட்டியில் சிங்கப்பூர் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பதக்கம் பெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த 17 வயதுக்குக் கீழுள்ள வாள் வீச்சாளர்களுக்கான போட்டி யில் லாவ் வென் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு பல்கேரியாவில் நடந்த போட்டியின் ஃபாய்ல் பிரிவில் அமித்தா வெண்கலப் பதக்கம் வென்ன்றார். நேற்று முன்தினம் நடந்த இந்தப் போட்டியில் ஜெர்மனியை 45-43 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற் றது. முன்னதாக 32வது சுற்றின் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 45=23 என்ற புள்ளிக் கணக்கிலும் பிரான்ஸ் விளையாட்டாளர்களை 45=42 என்ற புள்ளிக்கணக்கில் தோற் கடித்தது.

இத்தாலியின் வெரோனாவில் நேற்று முன்தினம் நடந்த 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண வாள் வீச்சுப் போட்டியில் அமித்தா பெர்த்தியர் (இடது) ஜெர்மனியின் சோஃபியா வெர்னருடன் பொருதுகிறார். படம்: அனைத்துலக வாள் வீச்சு சம்மேளனம்