கோல்டு கோஸ்ட்: காமன்வெத் போட்டிகளுக்கான பூப்பந்துப் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, மொரீசியசின் ஆதிஷ் லம்பாவுடன் மோதினார். இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 21=13, 21=10 என நேர்செட்டுகளில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தென்னாப்பிரிக்காவின் எல்சி டி வில்லியர்சை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சாய்னா சிறப்பாக விளையாடி 21-3, 21-1 என நேர்செட்டுகளில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, ஃபிஜி வீராங்கனை ஆண்ட்ரா ஒயிட்சைட்டை எதிர்கொண்டார். சிந்து 21-6, 21-3 என நேர்செட்டுகளில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

