சென்னை வெற்றி

சென்னை வெற்றி

fallback

12 Apr 2018 - 6:00 am

1 mins read

சென்னை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் கோல்கத்தா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியுள்ளது. காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் இரு அணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை அணி முதலில் பந்துவீசியது. கோல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி 203 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு இறங்கினர்.

முதலில் இருந்தே இருவரும் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினர். இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. முக்கியமான தருணத்தில் டோனி 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. பிராவோவும் ஜடேஜாவும் பந்தைப் பறக்கவிட்டு அணியை வெற்றியின் பாதைக்குக் கொண்டு சென்றனர். இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோல்கத்தா அணி சார்பில் டாம் கர்ரன் 2 விக்கெட்டுகளும் சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.