அதிரவைத்த ரோமா

அதிரவைத்த ரோமா

2 mins read
c6d70395-2b01-42a0-8a97-a474e189e95d
-

ரோம்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத் துக்கு இத்தாலியின் ரோமா தகுதி பெற்றுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயி னின் பார்சிலோனாவை அது கடைசி கட்டத்தில் தோற்கடித்தது. ஸ்பெயினில் நடைபெற்ற முதல் காலிறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் பார்சிலோனா 4=1 எனும் கோல் கணக்கில் ரோமா வைப் பந்தாடியிருந்தது. எதிரணியின் விளையாட்டரங் கத்தில் ஒரு கோல் போட்டது மட்டுமே ரோமாவுக்கு அப்போது ஆறுதலாக இருந்தது. அரையிறுதிக்குத் தகுதி பெற அந்த ஆறுதல் கோல் முக்கியமான தாக இருக்கும் என்று அப்போ தைக்கு ரோமா அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில், ரோம் நகரில் நேற்று அதிகாலை இவ்விரு குழுக் களுக்கும் இடையிலான காலிறுதி இரண்டாம் சுற்று ஆட்டம் நடை பெற்றது. ஆட்டம் தொடங்கிய திலிருந்து ரோமா தாக்குதலில் ஈடுபட்டது. ஆறாவது நிமிடத்தி லேயே எடின் ஸெக்கோ ரோமாவின் முதல் கோலைப் போட்டு ஒட்டு மொத்த கோல் அடிப்படையில் கோல் இடைவெளியைக் குறைத் தார். அதனைத் தொடர்ந்து, ரோமாவுக்குப் பல கோல் வாய்ப்பு கள் கிடைத்தன. ஆனால் அவற்றை அது தவறவிட்டது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி 13 நிமிடங்களில் ரோமாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதை கோலாக்கினார் அணித் தலைவர் டிரோசி. ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 4-3 என்றிருக்க இன்னும் ஒரே ஒரு கோல் போட்டால் எதிரணியின் விளையாட்டரங்கத்தில் கூடுதல் கோல் போட்டதன் விளைவாக அரையிறுதிக்கு ரோமா தகுதி பெறும் சூழல் உருவானது. தங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை உணர்ந்து ரோமா வீரர்கள் அடுத்தடுத்து பல தாக்குதலை நடத்தினர். இதில் பார்சிலோனா திக்குமுக்காடியது. இப்படி இருக்க, ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ரோமாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வந்த பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் சேர்த்தார் ரோமாவின் கோஸ்டாஸ் மனோலாஸ். இறுதிவரை பார்சிலோனாவால் பதிலடி கொடுக்க முடியாததால் அதன் அரையிறுதி கனவு கலைந்தது.

ரோமாவின் அரையிறுதி இடத்தை உறுதி செய்த கோலைப் போட்டு கொண்டாடும் கோஸ்டாஸ் மனோலாஸ் (இடது). படம்: ஏஎஃப்பி