ஜெய்ப்பூர்: தொடர்ந்து ஒன்பது ஆட்டங்களாக வென்று ராஜஸ் தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங் கில் அசைக்க முடியாத அணி யாகத் திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொட ரில் கடந்த இரு பருவங்களில் விளையாடத் தடை பெற்றிருந்த ராஜஸ்தான் அணி, நேற்று முன் தினம் இரவு நடந்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியைப் பத்து ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்து, இந்தப் பருவத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பூவா தலையாவில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசி யது. இதையடுத்து, முதலில் பந்த டித்த ராஜஸ்தான் அணியில் டார்சி ஷாட் (6), பென் ஸ்டோக்ஸ் (16) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந் தனர். ஆயினும், 3வது விக்கெட் டுக்கு அணித்தலைவர் ரகானே உடன் இணைந்த சஞ்சு சாம்சன் சரிவைத் தடுத்து அணியைத் தூக்கி நிறுத்தினார். அவர் 22 பந்துகளில் 37 ஓட்டங்களை விளாசினார்.
ரகானே 45 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 29 ஓட்டங்களையும் குவித்து அணிக்குக் கைகொடுத் தனர். ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப் பிற்கு 153 ஓட்டங்களை எடுத்து இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து, டக்வொர்த் லூவிஸ் முறைப்படி டெல்லி அணி ஆறு ஓவர்களில் 71 ஓட்டங்கள் எடுக்கவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்களை மட் டுமே எடுத்து தோற்றது. தனது முதல் போட்டியிலும் அவ்வணி தோற்றிருந்தது. அத்துடன், ராஜஸ்தானுக்கு எதிராக கடைசியாக விளையா டிய ஏழு போட்டிகளிலும் டெல்லி அணி தோல்வியடைந்துள்ளது.

