ரெய்னா காயம்; சென்னை ரசிகர்கள் சோகம்

1 mins read

சென்னை: பாதுகாப்பு காரணங் களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் புனேக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவ்வணி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில், அந்த அணியின் முன்னணி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா காயமடைந்து அடுத்த இரு போட்டிகளில் ஆட முடியாமல் போயிருப்பது அவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தசைநார் காயம் காரணமாக நாளை மறுநாள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத் திலும் 20ஆம் தேதி கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் ரெய்னா விளையாட மாட்டார். இதற்கிடையே, காயமடைந்த கேதார் ஜாதவிற்குப் பதில் இங்கி லாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.