கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியா வில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களில் துப்பாக்கிச் சுடுதல் வீராங் கனை மார்ட்டினா வெலோசா 2வது தங்கத்தைத் தனதாக்கினார். 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவில் 621.0 புள்ளிகள் பெற்று முதலாவதாக வந்தார் வெலோசா. 618.9 புள்ளிகளைப் பெற்ற இந்தி யாவின் தேஜஸ்வினி சவந்த் வெள்ளியும் அவரைவிட 0.8 புள்ளி குறைவாகப் பெற்ற ஸ்காட் லாந்தின் சியோனல்ட் மெக்கின் டோஷ் வெண்கலமும் வென்றனர். இன்னொரு சிங்கப்பூர் வீராங் கனையான ஜாஸ்மின் செர் 615.6 புள்ளிகளைப் பெற்று ஆறாம் நிலையில் வந்தார்.
18 வயதான வெலோசா கடந்த திங்கட்கிழமையன்று நடந்த 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியிலும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தார். "நம்பவே முடியவில்லை. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. முக்கிய போட்டிகளில் புரோன் பிரிவில் நான் கலந்துகொண்டது இதுவே முதல்முறை," என்று ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்சிடம் சொன் னார் வெலோசா.
துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவில் தங்கம் வென்ற சிங்கப்பூரின் மார்ட்டினா வெலோசா (நடுவில்). இந்தியாவின் தேஜஸ்வினி சவந்த் (இடது) வெள்ளிப் பதக்கத்தையும் ஸ்காட்லாந்தின் சியோனல்ட் மெக்கின்டோஷ் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். படம்: ஏஎஃப்பி

