உடற்குறையுள்ளோருக்கான காமன்வெல்த் பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் பளுதூக்கும் வீரர் கலைவாணன் 'ஹெவிவெய்ட்' பிரிவில் 156 கிலோ எடையைத் தூக்கி, தமது ஆகச் சிறந்த செயல்பாட்டைப் பதிவுசெய்தார். முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் மெக்சிகோவில் நடந்த உலக பாரா பளுதூக்கும் போட்டிகளில் இவர் 155 கிலோ எடையைத் தூக்கியிருந்தார். மொத்தம் பத்து போட்டியாளர்கள் கலந்துகொண்ட அந்தப் போட்டிகளில் 59 வயதான கலைவாணனே ஆக வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியை இவர் ஒன்பதாம் நிலையில் முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தனிப்பட்ட அளவில் புதிய உச்சம்
1 mins read
-

