ஊக்கமருந்துச் சோதனையில் தோற்றதால் காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சிங்கப்பூர் வீரர் ஒருவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடற்குறையுள்ள திடல்தட விளையாட்டாளரான முகம்மது கைரி பின் இஷாக், இன்று T47 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 28 வயதான கைரி கடந்த ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த உலக பாரா திடல்தடப் போட்டி களில் T46 100 மீ. பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் T46 200 மீ. பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். அத்துடன், சிங்கப்பூர் உடற் குறையுள்ளோர் விளையாட்டு மன்றம் 2013ல் நடத்திய தேசிய பாரா திடல்தடப் போட்டிகளில் T46 100, 200 ஆகிய இரு பிரிவுகளிலும் அவர் தங்கத்தைக் கைப்பற்றியிருந்தார். தற்காலிகத் தடை விதிக்கப் பட்டுள்ள கைரி ஆஸ்திரேலியா செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் வீரருக்குத் தடை
1 mins read

